Namasthe
welcome to all
our 7 day's camp
will start's from december 24'th to 31
plz
contact us
welcome to all
our 7 day's camp
will start's from december 24'th to 31
plz
contact us
‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும். ‘1
‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே. ‘2சமுதாய பிரச்சினைகள் பற்றி அறிய இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது என்பது அம்பேத்கரின் கருத்து.
நாம் வாழவேண்டுமென்றால்ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரின் மனத்தை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள், அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வு வக்கிரப் பட்டுப் போனதின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.
2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.
3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
4. வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘4
பயன்படுத்தப்பட்ட நூல்கள்
- லாகூர் பேருரை சுவாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம். III
- டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Part-II Chapter-IV
- சுவாமி விவேகானந்தர் , கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரைகள்
- டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII,
- சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். VII
- டாக்டர் அம்பேத்கரின் செய்தி ஹரிஜன், பிப்ரவரி 11, 1933
- சுவாமி விவேகானந்தர், சென்னை பேருரை (பாகம்-III)
- டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித்தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம் தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11.ஸெப்டம்பர், 1949.
- சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். III
- சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேருரை 26 செப்டம்பர் 1893
- எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3: http://jeyamohan.in/?p=4715
Akhil Bharatiya Soshit Laramchari Sangh Rly. Vs. Union of India (1981) 1 SCC 246.
‘இனப்பாகுபாடு காரணமாக, ஹரிஜனங்களைக் காட்டிலும் கல்வி கற்பதில் அந்தணர்கள் அதிக நாட்டம் காட்டுகிறார்கள் என்றால் அந்தணர்களின் கல்விக்காகப் பணம் செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் ஜரிஜனங்களுக்காகச் செலவிடுங்கள். பலவீனர்களுக்குக் கொடுங்கள்; ஏனெனில் உங்கள் கொடை அங்குதான் தேவை.’ சுவாமி விவேகானந்தர்.
ஷெட்யூல்டு வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு நியாயமானதே என்று கூறும் கர்நாடகா - அப்பாபாலு இங்கலே வழக்கின் தீர்ப்பிலும், 1995 SUPP 4 SCC 469 Para 19)
‘என்னைத் தீண்டாதே; என்ற வாக்கியத்துடன் எங்களை நாங்கள் அடையாளம் காட்ட விரும்பவில்லை. அது இந்துமதமல்ல இது நமது எந்த நூலிலும் இல்லை. இது நமது தேசிய வாழ்வில் குறுக்கிட்டுவிட்ட ஒரு மூடநம்பிக்கை’ என்ற சுவாமிஜியின் ஆணித்தரமான சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தரப்பட்ட இட ஒதுக்கீடு சரியானதே என்று கூறும் பிரபல இந்திரா சஹானி வழக்கிலும் நீதிமன்றம்,என்ற சுவாமிஜியின் கருத்துகளுடன் தனது தீர்ப்பிற்கு வலுசேர்த்தது.
’ஜாதியோ ஜாதி இல்லையோ, கொள்கைகளோ அவை இல்லையோ, தனி நபரின் சிந்தனைச் சுதந்திரம் மற்றும் செயற்சுதந்திர ஆற்றலை - அந்த ஆற்றலால் பிறருக்குக் கேடு உண்டாகாதவரை - தடுக்கின்ற மனிதன், வகுப்பு, ஜாதி, நாடு, அமைப்பு என்று எதுவானாலும் அது சனியன்தான்; அது ஒழிந்தே ஆகவேண்டும்’ (ஞானதீபம் - சுடர் 9, பக்கம் 227)
பிரிவினைகளே இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார். நம் நாட்டின் இன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பற்றிய சிறந்த கருத்துகளும் கூறியுள்ளார்.‘ஜாதி, பிறப்பு, பலவீனம், பலம் இவற்றைக் கடந்து எல்லா ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும். உயர்ந்தவன், தாழ்ந்தவன், பலவீனன், பலம் பொருந்தியவன் எவராயினும் ஒவ்வொருவரிடமும் அந்த எல்லையற்ற ஆன்மா இருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் எதையும் சாத்தியமாக்கும், எல்லையற்ற சக்தி, ஆற்றல் இருப்பதால் யாரும் சிறந்தவனாகவும் நல்லவனாகவும் ஆகமுடியும் என்ற திடமான உறுதியை அளிக்கிறது. ஆகவே நாம் ஒவ்வோர் ஆன்மாவிடமும் ‘எழுந்திரு, விழித்திரு, லட்சியத்தை அடையும் வரை நில்லாதிரு’ என்று சொல்வோம், நம்பிக்கை அளிப்போம்’
(Akil bharatiya Soshit Karamchari Sangh Rly. Vs. Union Bank of India (1981) 1 SCC 246) என்ற சுவாமிஜியின் உரை ஒட்டுமொத்த இந்தியர்களையும் தட்டி எழுப்பும் பிரகடனமாக உள்ளது.