ஒரு தேசம், இரு உரைகள்
ஜடாயு
18 Nov 2010 |
அச்சிட
இந்திய தர்க்க சாஸ்திரத்தில் அருந்ததி நியாயம் என்று ஒரு கருதுகோள் உண்டு. அருந்ததி என்ற நட்சத்திரம் மிகச் சிறியது. வானவெளியில் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதனால் அதற்கு அருகில் உள்ள பெரிய நட்சத்திரத்தைக் காட்டி, பிறகு படிப்படியாக சின்ன நட்சத்திரத்தை அடையாளம் சொல்வார்கள். பருண்மையிலிருந்து நுண்மைக்கு அறிவுபூர்வமாக இட்டுச் செல்லும் வழிமுறை.
வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றிக் கூட நுண்ணுணர்வு கொண்டவர் தான் அவர். ஆனால் God of small things என்றே ஒரு ஆங்கில நாவல் எழுதி புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் சமீபத்தில் தில்லியில் ஆற்றிய உரையில் நியாயம் என்பது சிறிதும் இல்லை என்று இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் கருதுகிறார்கள்.
தில்லியில் ஒரு பொது நிகழ்ச்சியில் காஷ்மீர் பிரிவினைவாதியும் தீவிரவாதியுமான சையத் அலி ஷா கீலானியுடன் ஒரே மேடையில் அமர்ந்து அவர் பேசிய மேற்கூறிய சொற்கள் அங்கு அமர்ந்திருந்த சட்டத்தை மதிக்கும் பல தரப்பட்ட இந்தியர்களையும், குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்தால் காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாகி விட்ட காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரையும், கொதித்தெழ வைத்தன. அவர்கள் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்ப, காவலர்கள் உள்நுழைந்து அந்த தேசபக்தர்களை வெளியேற்ற, காவல்துறை பாதுகாப்புடன் அம்மணியின் பிரசாரம் இனிதே நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, அவர்மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப் படலாம், அவர் கைது கூட செய்யப்படலாம் என்று செய்தி ஊடகங்கள் சொல்லத் தொடங்கின.
மேலும், இந்த தேசத்தின் ஏழைகளிலும் ஏழைகளுக்காக (poorest of the poor) தான் குரல் கொடுப்பதாகவும் அவர் முரசறைகிறார். சக இந்தியர்கள் மீது தீராத வெறுப்பும் மதவெறியும் ததும்பி வழியும் முகங்களுடன் இந்தியக் காவல் படைகள் மீது கூலிவாங்கிக் கொண்டு கல்லெறியும் காஷ்மீரி லும்பன் கூட்டங்களை நாடு முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்கத் தான் செய்தது. நன்கு தின்று ஊட்டம் பெற்ற உடல்கள். நேர்த்தியான உடைகள். அகம்பாவமும் திமிரும் கலந்த பேச்சுகள். காலை எழுந்தவுடன் தெருவுக்கு வந்து நின்றுகொண்டு இந்தியா எங்களை நசுக்குகிறது என்று வெறிக்கூச்சல்கள். பல பத்தாண்டுகளாக காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்று இந்திய அரசு கோடிகோடியாகக் கொண்டு கொட்டும் பணத்தை (The Great Kashmiri Loot of India என்று ரிடீஃப் ராஜீவ் சீனிவாசன் ஒருமுறை எழுதியிருந்தார்) எந்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த விடாமல் எப்போதும் இந்திய தேசிய எதிர்ப்பையும், வன்முறையையும் ஆறாமல் வைத்திருக்கும் பிரிவினைவாதிகள்.

அரசு இயந்திரத்தின் திறமையின்மையையும், போலிஸ் அராஜகங்களையும், உள்ளூர் பிரசினைகளையும் குழைத்துக் கலக்கி, அதன்மீது தேசவிரோத பிரிவினை வாதத்தையும், இஸ்லாமிய மதவெறியையும், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தையும் அவியலாகக் கலந்து அப்பி ஒட்டுமொத்தமாக இந்தியா என்ற கருத்தையே தன் காழ்ப்புணர்ச்சிக்கு இலக்காக்கி துவேஷ பிரசாரம் செய்கிறார் அருந்ததி ராய். அவர் அடக்குமுறை என்று முத்திரை குத்தி வசைபாடுதை இந்த தேசத்தின் மண்மீது மட்டும் தான் நின்று கொண்டு அவர் செய்ய முடியும்.
இது கருத்துச் சுதந்திரத்தின் கட்டற்ற வெளிப்பாடு அல்ல, அதன் துஷ்பிரயோகம். இதற்குப் பெயர் நீதிக்கும் நல்வாழ்வுக்குமான குரல் அல்ல, கடைந்தெடுத்த அறிவுஜீவிக் கயமைத்தனம். அதனால் தான் அதே வார்ப்பில் உள்ள தேசவிரோதிகளும், அறிவுஜீவி கிரிமினல்களும் உடனடியாக இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.
‘அருந்ததி ராய் சொல்வதைத் தான் நானும் நாற்பது வருஷமாக சொல்லி வருகிறேன். அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பேசும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் என்பதால் அவர் சொல்வது இந்தியா மட்டுமல்ல உலக அளவில் கவனிக்கப் படுகிறது’ என்று புல்லரிக்கிறார் ஆந்திராவின் பிரபல நக்சலைட் பயங்கரவாதி வரவர ராவ். இந்திய வெறுப்பு பிரசாரத்தில் அருந்ததி ராயின் சக பயணி இவர். எம்.எஸ்.எஸ் பாண்டியன் என்ற தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ”ஆய்வாளர்” சொல்கிறார் - “1962ல் அண்ணாதுரை தனிநாடு வேண்டும் என்றே முழங்கினார் - நேரடியான பிரிவினைக் கோரிக்கை அது.இப்போது அப்படியெல்லாம் பேசுவதே அபசாரம் (taboo) ஆகி விட்டது. காளைச்சாணம்! ஜனநாயகம் என்ற பெயரில் *இந்த விவாதம் கூட* செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அக்கிரமம்” (இந்தியன் எக்ஸ்பிரஸ், 14 நவம்பர்,2010). இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு மானியம் வழங்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் இதைப் பேசுகிறார்.
நல்லது. பாண்டியன் வீட்டில் தினந்தோறும் காலை எழுந்தவுடன் அவரும் அவர் மனைவியும் சேர்ந்து வாழலாமா வேண்டாமா என்ற விவாதம் ஒவ்வொரு நாளும் நடந்தால் தான் அது உண்மையான ஜனநாயக குடும்ப அமைப்பு என்று கருதுகிறார் போலத் தெரிகிறது. முதலில் அதை அவர் தன் வீட்டில் செயல்படுத்தத் தயாரா? வீட்டுக்கு ஒரு நீதி நாட்டுக்கு வேறோரு நீதியா?
அருந்ததி ராய்க்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புணர்வை நடுத்தர வர்க்க போலி பாவனை (middle class hypocricy) என்று வசைபாடுகிறார்கள் இந்த மேல்தட்டு, மேட்டிமைவாத அறிவுஜீவிகள்.
ஏனென்றால் நாட்டின் அமைதியிலும் நல்வாழ்விலும் அதிக அக்கறை கொண்டது இந்த நடுத்தர வர்க்கம் தான். இந்த மாபெரும் ஜன சமூகத்தில் வேதனைகளைச் சகித்துக் கொண்டு, அதே சமயம் தன் கனவுகளையும் உயிரோட்டத்துடன் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வர்க்கம் என்றால் அது தான். இந்த சமூகத்தின் சில்லறைத் தனமும் கையறு நிலையும் முட்டாள்தனங்களும் மட்டுமல்ல, இதன் நீதியுணர்வும் அறவுணர்வும் சாதனைகளுக்கும் உன்னதங்களுக்குமான பெருமையும் கூட பெருமளவில் நடுத்தரவர்க்கத்தைத் தான் சாரும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் அப்படித் தான்.
அருந்ததியின் உரையால் கடுப்படைந்திருந்த இந்திய உள்ளங்களில் பாரக் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உடனடியாக ஒரு உவகையையும் ஒத்திசைவையும் உண்டாக்கியது ஆச்சரியமில்லை.
பொருளாதார, உலக அரசியல் ரீதியாக ஒபாமா விஜயத்தின் தாக்கம் என்ன, சாதக பாதங்கள் என்ன என்பது பற்றி நிறையவே பேசி விவாதிக்கப் பட்டு விட்டது. அதற்குள் போகவேண்டாம். தனது சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில், குறியீடுகளிலும் (symbolism), சமிக்ஞைகளிலும் (gestures) மிகவும் கவனம் செலுத்துபவர் ஒபாமா என்று கூறப்படுகிறது. எனவே இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் என்ன என்று பார்க்கலாம். அந்த உரை ஒரு சம்பிரதாய நடைமுறையே என்றாலும் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதில் உள்ள நேர்த்தியும் பொருட்செறிவும் அதைத் தயாரித்தவரின் கைவண்ணமே என்றாலும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அரசின் முழு அங்கீகாரமும் அதன் மீது படிந்துள்ளது என்பதால் அது முக்கியமாகிறது.
மகாத்மா காந்தியைப் பலமுறை குறிப்பிட்டது அந்த உரை.
இதையே நாம் சொன்னால் இந்துத்துவ புருடா என்று எள்ளி நகையாடுபவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
ஒபாமாவின் உரை இந்தியாவை ஒரு அரசாட்சியாக மட்டுமல்ல, ஒரு தேசமாக, ஒரு வாழும் கலாசாரமாக, ஒரு பண்பாடாக (civilization) அணுகிப் பேசியது என்பதைக் கவனிக்க வேண்டும். மரங்களை வைத்து காட்டை எடைபோடுவது போல இந்திய அரசு அமைப்பின் ஊழல்களை மட்டும் வைத்து இந்தியா என்ற மகோன்னதத்தை அது மதிப்பிடவில்லை. நமது போலி மதச்சார்பின்மை அறிவுஜீவிகளுக்கு என்னென்ன கருத்தாக்கங்கள் கடும் மலச்சிக்கலை ஏற்படுத்துமேர் அவற்றை ஒவ்வொன்றாகப் போற்றிப் புகழ்ந்து ஒபாமா பேசியிருக்கிறார் என்று சொல்வது சரியாக இருக்கும்.
அருந்ததி ராயின் தேசவிரோத உரைக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இணையத்தில் பெடிஷன்கள் மூலம் பிரசாரம் நடத்தப் பட்டது. அந்த நேரத்தின் உணர்ச்சி வசத்தில் அதில் நானும் உடனே கையெழுத்திட்டேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கையில் அது தவறு என்று தோன்றுகிறது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்ட அரசின் நிலைப்பாடு, இப்போதைக்கு மிகச் சரியானது என்றே நினைக்கிறேன். கருத்து சுதந்திரத்தின் பதாகையைத் தூக்கிப் பிடித்ததற்காக ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கொடுங் கரங்களால் சிறைப்படுத்தப் பட்டவர் என்ற தியாகிப் பட்டம் பற்றியும், அவரது இலக்கியப் படைப்புகளை இப்போது யாருமே படிக்காத காரணத்தால் தவறவிட்ட சர்வதேச கவனத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றியும் அருந்ததி ராய் கனவு கண்டிருக்கக் கூடும். அவரது அந்தக் கனவில் மண் விழுந்திருக்கிறது.
கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் தீர்மானத்தில் (First amendment) வரையறுக்கப் பட்டுள்ளது. அதனை வடிவமைத்த சட்ட மேதை ஜேம்ஸ் மேடிஸன் அப்போது சொன்ன ஒரு கருத்து சிந்தனைக்குரியது - ’ஒரு சில நச்சுக் கிளைகளை வெட்டப் போய் நற்கனிகளை வழங்கும் மரத்தின் வீரியத்தை நாம் காயப் படுத்துவதைக் காட்டிலும், அவை கொஞ்சம் செழித்து வளர்வதை அப்படியே விட்டுவிடுவதே நல்லது’.
அருந்ததி நியாயத்தின் இன்னொரு பரிணாமம்?
வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றிக் கூட நுண்ணுணர்வு கொண்டவர் தான் அவர். ஆனால் God of small things என்றே ஒரு ஆங்கில நாவல் எழுதி புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் சமீபத்தில் தில்லியில் ஆற்றிய உரையில் நியாயம் என்பது சிறிதும் இல்லை என்று இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் கருதுகிறார்கள்.
’காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை, அது தான் வரலாற்று உண்மை. பசியும் நிர்வாணமும் தாண்டவமாடும் இந்தியாவிலிருந்து (bhookhe nange hindustan) காஷ்மீரிகள் விடுதலை அடைய வேண்டும்.இந்தியாவின் அடக்குமுறைக்கான சாதனங்களாக தாங்கள் பயன்படுத்தப் படுவதை காஷ்மீரிகள் அனுமதிக்கக் கூடாது’.
’ஸ்ரீநகரில் இருந்து இதை எழுதுகிறேன். சமீபத்தில் காஷ்மீர் பற்றி பொதுக்கூட்டங்களில் நான் சொன்ன கருத்துக்களுக்காக தேசவிரோகக் குற்றத்தின் கீழ் நான் கைது செய்யப் படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள ஆயிரக்கணக்கானவர்கள் பல காலமாக சொல்வதைத் தான் நான் எதிரொலிக்கிறேன். எனது பேச்சை உன்னிப்பாகப் படிப்பவர்கள் அது நீதிக்கான அழைப்பு என்பதைப் புரிந்து கொள்வார்கள். உலகின் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்புகளில் ஒன்றின் கீழ் வாழ்ந்து வரும் காஷ்மீர் மக்களுக்காக நீதி கேட்கிறேன்.. தங்கள் மனத்திலிருப்பதைப் பேசும் எழுத்தாளர்களின் வாயை அடைக்கும் இந்த தேசத்திற்காக பரிதாபப் படுகிறேன். கார்ப்பரேட் ஊழல் பெருச்சாளிகளும், கொலைகாரர்களும் சுதந்திரமாகத் திரிய, நீதிக்காக பேசுபவர்களை ஜெயிலில் அடைக்கக் கோரும் இந்த தேசத்திற்காக பரிதாபப் படுகிறேன்’
என்று அடுத்த நாள் தனக்கே உரிய தார்மீக தளுக்கு மொழியில் அறிக்கை வெளியிட்டார் அருந்ததி ராய். எப்போது கைது வரும், எப்போது தியாகக் கிரீடத்தை சூடிக் கொள்ளலாம் என்று அவர் துடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.மேலும், இந்த தேசத்தின் ஏழைகளிலும் ஏழைகளுக்காக (poorest of the poor) தான் குரல் கொடுப்பதாகவும் அவர் முரசறைகிறார். சக இந்தியர்கள் மீது தீராத வெறுப்பும் மதவெறியும் ததும்பி வழியும் முகங்களுடன் இந்தியக் காவல் படைகள் மீது கூலிவாங்கிக் கொண்டு கல்லெறியும் காஷ்மீரி லும்பன் கூட்டங்களை நாடு முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்கத் தான் செய்தது. நன்கு தின்று ஊட்டம் பெற்ற உடல்கள். நேர்த்தியான உடைகள். அகம்பாவமும் திமிரும் கலந்த பேச்சுகள். காலை எழுந்தவுடன் தெருவுக்கு வந்து நின்றுகொண்டு இந்தியா எங்களை நசுக்குகிறது என்று வெறிக்கூச்சல்கள். பல பத்தாண்டுகளாக காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்று இந்திய அரசு கோடிகோடியாகக் கொண்டு கொட்டும் பணத்தை (The Great Kashmiri Loot of India என்று ரிடீஃப் ராஜீவ் சீனிவாசன் ஒருமுறை எழுதியிருந்தார்) எந்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த விடாமல் எப்போதும் இந்திய தேசிய எதிர்ப்பையும், வன்முறையையும் ஆறாமல் வைத்திருக்கும் பிரிவினைவாதிகள்.
இவர்களைப் பார்த்து நாம் ஏழைகளிலும் ஏழைகள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்று அருந்ததி நினைக்கிறாரோ? மாறாக, இந்த நாட்டின் உண்மையான ஏழைகள் காஷ்மீரில் இல்லை. தோற்றத்திலேயே பரிதாபகரமாகக் காட்சியளிக்கும் வனவாசிகளும், வாழ்க்கையே ஒரு தினசரி போராட்டமாக உடலை உருக்கி உதிரத்தைச் சிந்தி வேலை செய்யும் உழைப்பாளிகளும் ஒரிஸ்ஸாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் ஜார்கண்டிலும், ஏன் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், பீகார் உள்ளிட்ட மற்ற எல்லா இந்திய மாநிலங்களிலும் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பில் பசியாறி, கனவுகளைக் கண்ணில் தேக்கி தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் கோடிக் கணக்கான இந்திய கீழ் நடுத்தர வர்க்கத்து மாந்தர்கள் “ஏழைகள்” இல்லையா?
அவர்கள் அடக்குமுறையின் கீழ் வாழ்வதாக நினைக்கவில்லை. பிரிவினை கோரவும் இல்லை. அவர்கள் விழைவது ஒன்றுபட்ட தேசிய வாழ்க்கையை, அது சாத்தியமாக்கும் அளப்பரிய வாய்ப்பு வசதிகளை, முன்னேற்றத்தை, வளர்ச்சியை. அவர்கள் வேண்டுவது உணவும், உடையும், கல்வியும், தொழில் வாய்ப்புகளும். சாதாரண பாமர மக்களின் இந்த சாதாரண பாமர முட்டாள்தனத்தை அருந்ததி ராய் போன்ற அறிவுஜீவி எழுத்தாளரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே துப்பாக்கிகளும், துவேஷ பிரசாரங்களும், ரத்தக்களறிகளும் தான் அவர்களது மீட்புக்கு வழி என்று போதிக்கிறார். காஷ்மீர் பிரிவினைவாதத்தால் நாட்டின் வடக்கு மூலையில் மட்டும் தான் பிரசினை. மாவோயிச பயங்கரவாதம் தலையெடுத்தால் இந்தியா முழுவதுமே தீப்பற்றி எரியுமே. இதை விட இந்தியாவின் ஏழையிலும் ஏழைகளான மக்களுக்கு நல்லது என்ன இருக்க முடியும்?
அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் (state), தேசத்தையும் (nation) வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும் என்ற கருத்து தான் உண்மையில் அவர் பிரசாரம் செய்வது. ’பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த மக்களை அவர்கள் விருப்பதிற்கு மாறாகப் பிடித்து அடைத்து வைத்திருக்கும் கூண்டு இந்தியா’ என்று இதற்கு முன்பு ஒருமுறை தன் உள்ளக் கருத்தை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.அரசு இயந்திரத்தின் திறமையின்மையையும், போலிஸ் அராஜகங்களையும், உள்ளூர் பிரசினைகளையும் குழைத்துக் கலக்கி, அதன்மீது தேசவிரோத பிரிவினை வாதத்தையும், இஸ்லாமிய மதவெறியையும், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தையும் அவியலாகக் கலந்து அப்பி ஒட்டுமொத்தமாக இந்தியா என்ற கருத்தையே தன் காழ்ப்புணர்ச்சிக்கு இலக்காக்கி துவேஷ பிரசாரம் செய்கிறார் அருந்ததி ராய். அவர் அடக்குமுறை என்று முத்திரை குத்தி வசைபாடுதை இந்த தேசத்தின் மண்மீது மட்டும் தான் நின்று கொண்டு அவர் செய்ய முடியும்.
இது கருத்துச் சுதந்திரத்தின் கட்டற்ற வெளிப்பாடு அல்ல, அதன் துஷ்பிரயோகம். இதற்குப் பெயர் நீதிக்கும் நல்வாழ்வுக்குமான குரல் அல்ல, கடைந்தெடுத்த அறிவுஜீவிக் கயமைத்தனம். அதனால் தான் அதே வார்ப்பில் உள்ள தேசவிரோதிகளும், அறிவுஜீவி கிரிமினல்களும் உடனடியாக இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.
‘அருந்ததி ராய் சொல்வதைத் தான் நானும் நாற்பது வருஷமாக சொல்லி வருகிறேன். அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பேசும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் என்பதால் அவர் சொல்வது இந்தியா மட்டுமல்ல உலக அளவில் கவனிக்கப் படுகிறது’ என்று புல்லரிக்கிறார் ஆந்திராவின் பிரபல நக்சலைட் பயங்கரவாதி வரவர ராவ். இந்திய வெறுப்பு பிரசாரத்தில் அருந்ததி ராயின் சக பயணி இவர். எம்.எஸ்.எஸ் பாண்டியன் என்ற தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ”ஆய்வாளர்” சொல்கிறார் - “1962ல் அண்ணாதுரை தனிநாடு வேண்டும் என்றே முழங்கினார் - நேரடியான பிரிவினைக் கோரிக்கை அது.இப்போது அப்படியெல்லாம் பேசுவதே அபசாரம் (taboo) ஆகி விட்டது. காளைச்சாணம்! ஜனநாயகம் என்ற பெயரில் *இந்த விவாதம் கூட* செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அக்கிரமம்” (இந்தியன் எக்ஸ்பிரஸ், 14 நவம்பர்,2010). இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு மானியம் வழங்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் இதைப் பேசுகிறார்.
நல்லது. பாண்டியன் வீட்டில் தினந்தோறும் காலை எழுந்தவுடன் அவரும் அவர் மனைவியும் சேர்ந்து வாழலாமா வேண்டாமா என்ற விவாதம் ஒவ்வொரு நாளும் நடந்தால் தான் அது உண்மையான ஜனநாயக குடும்ப அமைப்பு என்று கருதுகிறார் போலத் தெரிகிறது. முதலில் அதை அவர் தன் வீட்டில் செயல்படுத்தத் தயாரா? வீட்டுக்கு ஒரு நீதி நாட்டுக்கு வேறோரு நீதியா?
அருந்ததி ராய்க்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புணர்வை நடுத்தர வர்க்க போலி பாவனை (middle class hypocricy) என்று வசைபாடுகிறார்கள் இந்த மேல்தட்டு, மேட்டிமைவாத அறிவுஜீவிகள்.
ஏனென்றால் நாட்டின் அமைதியிலும் நல்வாழ்விலும் அதிக அக்கறை கொண்டது இந்த நடுத்தர வர்க்கம் தான். இந்த மாபெரும் ஜன சமூகத்தில் வேதனைகளைச் சகித்துக் கொண்டு, அதே சமயம் தன் கனவுகளையும் உயிரோட்டத்துடன் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வர்க்கம் என்றால் அது தான். இந்த சமூகத்தின் சில்லறைத் தனமும் கையறு நிலையும் முட்டாள்தனங்களும் மட்டுமல்ல, இதன் நீதியுணர்வும் அறவுணர்வும் சாதனைகளுக்கும் உன்னதங்களுக்குமான பெருமையும் கூட பெருமளவில் நடுத்தரவர்க்கத்தைத் தான் சாரும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் அப்படித் தான்.
அருந்ததியின் உரையால் கடுப்படைந்திருந்த இந்திய உள்ளங்களில் பாரக் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உடனடியாக ஒரு உவகையையும் ஒத்திசைவையும் உண்டாக்கியது ஆச்சரியமில்லை.
”அறிவியலும், சிந்தனைத் திறனும் வளர்ந்த ஒரு பழம்பெரும் பண்பாடு. மானுட வளர்ச்சியின் மீதான அடிப்படை நம்பிக்கை. இந்த அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் மீது தான், சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி உயர்ந்த அந்த நள்ளிரவு முதற்கொண்டு நீங்கள் தேசத்தைக் கட்டமைத்திருக்கிறீர்கள். இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக ஆகியிருக்கிறீர்கள்”.
இது வெறும் புகழுரை அல்ல. பெரும் வேறுபாடுகள் கொண்ட ஒரு தேசத்தின் ஜனாதிபதியாக ஒபாமா தன் மன ஆழத்திலிருந்தே இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ண இடமிருக்கிறது.மகாத்மா காந்தியைப் பலமுறை குறிப்பிட்டது அந்த உரை.
”காந்தி என்ற ஒருவர் தனது செய்தியை அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அளித்திருக்காவிட்டால், இன்று அமெரிக்க ஜனாதிபதியாக உங்கள் முன் நான் நின்றுகொண்டிருக்க முடியாது என்பதையும் நான் மனதில் கொள்கிறேன்”.
தனது சொந்த வாழ்க்கையை முன்வைத்து, உலகெங்கும் உள்ள அடக்கி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான பேரொளியாக எப்படி “அடக்குமுறை தேசியமான” இந்தியா விளங்கி வருகிறது என்பதைச் சொல்ல ஒபாமா தவறவில்லை.“இந்தியாவின் வலிமை, சொல்லப் போனால் இந்தியா என்ற கருத்தாக்கமே (the very idea of india) அனைத்து நிறங்களையும், சாதிகளையும், குழுக்களையும் அரவணைத்துக் கொள்வது தான் என்று நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். இந்த சபையே அந்தப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. சமயங்களின் இந்தப் பன்முகத் தன்மையைத் தான் எனது சொந்த ஊரான சிகாகோவுக்கு நூறு வருடம் முன்பு வந்த புகழ்பெற்ற சுவாமி, விவேகானந்தர் என்ற அந்த சுவாமி சிலாகித்துப் பேசினார். புனிதமும் தூய்மையும் ஈகையும் உலகில் எந்த ஒரு திருச்சபையின் தனிச்சொத்தும் அல்ல; ஒவ்வொரு சமயமும் உயர்ந்த ஒழுக்கமும், பண்புகளும் கொண்ட ஆண்களையும் பெண்களையும் உருவாக்கியிருக்கிறது என்று அவர் சொன்னார்.”
இது தான் அமெரிக்காவின், உலகத்தின் பார்வையில் இந்திய தேசியத்தின் உண்மையான மதிப்பீடு.”.. ஒன்றிணைந்த மானுடம் என்பதைக் கண்டறிந்த பிறகு, நாம் நேசிக்கும் லட்சியங்களை நிறைவேற்றுவது பற்றி நாம் யோசிக்கலாம். இந்தியர்களுக்கு நூற்றாண்டுகளாக வழிகாட்டி வரும் பஞ்சதந்திரம் என்ற கதைத் தொகுப்பில் ஒரு எளிய அறிவுரை உள்ளது. இந்தப் பேரவையின் நுழைவாயிலில் உள்ளே வருபவர்கள் ஒவ்வொருவரும் பார்க்கும் படி கல்வெட்டாக அதை வைத்திருக்கிறார்கள் - இது உன்னுடையது அது என்னுடையது என்பது சிறிய மனங்களின் கணக்கு. விசால இதயம் படைத்தவர்களுக்கு உலகமே அவர்களது குடும்பம்.”
நவீன ஆன்மிகவாதிகளின் பிரசங்கங்களில் நாம் அடிக்கடி கேட்கும் “வசுதைவ குடும்பகம்”- உலகமே ஒரு குடும்பம் என்ற மேற்கோளை அதன் சரியான இடம்பொருள் சுட்டி ஒபாமா குறிப்பிட்டார். இந்த மேற்கோள் பஞ்சதந்திரக் கதையில் ஒரு நரி சொல்லும் ராஜதந்திர உபதேசமாகத் தான் வருகிறது. ஆனால் உலக சகோதரத்துவத்துக்கான செய்தியும் உள்ளுறை பொருளாக இதில் உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க நட்பு சீனாவையோ, பாகிஸ்தானையோ தனிமைப் படுத்தும் நோக்கில் இருக்காது, ஏனென்றால் அரசியலில் “உலகம் எல்லாம் ஒரே குடும்பம்” என்று குறிப்புணர்த்தக் கூட ஒபாமா எண்ணியிருக்கலாம். எதுவானாலும், பண்டைய இந்தியாவின் முதிர்ச்சியடைந்த அரசியல் ஞானத்தை அந்த இடத்தில் சரியாக மேற்கோள் காட்டியது பாராட்டத் தக்கது.“நமது இணைந்த எதிர்காலத்திற்கான எனது நம்பிக்கை இந்தியாவின் புகழ்மிக்க கடந்தகாலத்தின் மீது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகை உருவாக்கி வரும் பண்பாட்டின் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பின் அடிப்படையிலானது. மனித உடலின் நுட்பங்களையும், நமது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் பற்றிய அறிவின் திறவுகோல் இந்தியர்களிடம் இருந்தது. நமது தகவல் யுகமே, ஏன் பூஜ்யம் என்ற எண் உட்பட, இந்தியக் கண்டுபிடிப்புகளின் மீது தான் வேர்விட்டு நின்று கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகையாகாது.”
ஒபாமாவின் உரை இந்தியாவை ஒரு அரசாட்சியாக மட்டுமல்ல, ஒரு தேசமாக, ஒரு வாழும் கலாசாரமாக, ஒரு பண்பாடாக (civilization) அணுகிப் பேசியது என்பதைக் கவனிக்க வேண்டும். மரங்களை வைத்து காட்டை எடைபோடுவது போல இந்திய அரசு அமைப்பின் ஊழல்களை மட்டும் வைத்து இந்தியா என்ற மகோன்னதத்தை அது மதிப்பிடவில்லை. நமது போலி மதச்சார்பின்மை அறிவுஜீவிகளுக்கு என்னென்ன கருத்தாக்கங்கள் கடும் மலச்சிக்கலை ஏற்படுத்துமேர் அவற்றை ஒவ்வொன்றாகப் போற்றிப் புகழ்ந்து ஒபாமா பேசியிருக்கிறார் என்று சொல்வது சரியாக இருக்கும்.
அருந்ததி ராயின் தேசவிரோத உரைக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இணையத்தில் பெடிஷன்கள் மூலம் பிரசாரம் நடத்தப் பட்டது. அந்த நேரத்தின் உணர்ச்சி வசத்தில் அதில் நானும் உடனே கையெழுத்திட்டேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கையில் அது தவறு என்று தோன்றுகிறது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்ட அரசின் நிலைப்பாடு, இப்போதைக்கு மிகச் சரியானது என்றே நினைக்கிறேன். கருத்து சுதந்திரத்தின் பதாகையைத் தூக்கிப் பிடித்ததற்காக ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கொடுங் கரங்களால் சிறைப்படுத்தப் பட்டவர் என்ற தியாகிப் பட்டம் பற்றியும், அவரது இலக்கியப் படைப்புகளை இப்போது யாருமே படிக்காத காரணத்தால் தவறவிட்ட சர்வதேச கவனத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றியும் அருந்ததி ராய் கனவு கண்டிருக்கக் கூடும். அவரது அந்தக் கனவில் மண் விழுந்திருக்கிறது.
கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் தீர்மானத்தில் (First amendment) வரையறுக்கப் பட்டுள்ளது. அதனை வடிவமைத்த சட்ட மேதை ஜேம்ஸ் மேடிஸன் அப்போது சொன்ன ஒரு கருத்து சிந்தனைக்குரியது - ’ஒரு சில நச்சுக் கிளைகளை வெட்டப் போய் நற்கனிகளை வழங்கும் மரத்தின் வீரியத்தை நாம் காயப் படுத்துவதைக் காட்டிலும், அவை கொஞ்சம் செழித்து வளர்வதை அப்படியே விட்டுவிடுவதே நல்லது’.
அருந்ததி நியாயத்தின் இன்னொரு பரிணாமம்?
No comments:
Post a Comment